குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிஃபெண்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த விபத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்த மக்களால் டிஃபெண்டர் ரக வாகனத்தின் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.