பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் லங்கா இந்தியன் ஒயில் நிறுவன தனியார் பௌசர் சாரதிகளும் இணைந்துகொள்ளவுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கேற்ப போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் களஞ்சியசாலைகள் மற்றும் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.