தி.மு.க. பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை “முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, தி.மு.க. சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் எனவும் இத்துடன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும் முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தி.மு.க. பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை “முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.