பெட்ரோலின் தரம் குறித்து ஆராய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் எரிபொருள் தொடர்பில் பகிரப்பட்ட காணொளி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்களின் குருநாகல் பிராந்திய அதிகாரிகள் குருநாகல் நாரம்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
Kurunagala Regional Officers of CPC and CPSTL has been dispatched to Narammala, Kurunagala to investigate in to the quality of petrol questioned on a shared video on social media.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 5, 2022