“மஹிந்த சரணம் கச்சாமி , பெசில் சரணம் கச்சாமி” என பாடுபவர் சாணக்கியன் – ரணில்

762

மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக கண்டித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றுஉரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நான் ராஜபக்ஷவர்களுடன் இருப்பதாக சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டார். ஆனால், நான் அவர்களுடன் இருக்கவில்லை, ராஜபக்ஷ பிரபாகரனுடன் சேர்ந்து என்னை தோற்கடிக்க நினைத்தார்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும்.

2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

எனவே,  மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை, சாணக்கியன் எம்.பியே அவர்கள் பின்னால் சென்றார்.

அவர்தான் அப்போது “மஹிந்த சரணம் கச்சாமி, பெசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி” என்று அவர்கள் பின்னால் சென்றிருந்தார். எனவே, ஏன் சாணக்கியன் எம்.பி என்னைப் பற்றி இவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here