கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எனினும், ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.