சபாநாயகரை சந்தித்தார் இலங்கைக்கான சீனத் தூதுவர்

421

இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவைச் சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங் மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றுக் காலை (26) சந்தித்தார்.

தற்போதைய கொவிட்-19 சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் நேரத்தில்இ கொவிட்-19ஐ கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை சீன அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

அத்துடன்இ இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதாரஇ நிதி ஒத்துழைப்பு மற்றும் பாராளுமன்ற நட்புறவை பலப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற ரீதியில் சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here