நாளைய தினம் (12) பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு மாற்றமில்லாமல் தொடரும் எனவும், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் எரிபொருள் மின்வெட்டு நேரம் 5 மணிநேரமாக அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை (12) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.