இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக களு கங்கை சிறிய அளவிலான வெள்ள நிலைமையை அடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
களு கங்கையை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், களு கங்கையின் இரண்டு பகுதிகளிலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும், குறித்த பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.