follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஏப்ரல் மாதத்தில் குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால்  அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால்  அதிகரிப்பு

Published on

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் சாதாரண குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு 5,672 ரூபாவால்  அதிகரித்துள்ளது.

இலங்கை குடிசன மற்றும் புள்ளவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய உணவுக்கான செலவு 3,345 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அரசிக்கான செலவு மாத்திரம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் 989 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதுதவிர பால்மாவுக்கான செலவு 369 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, உணவல்லா பொருட்களுக்கான செலவு 2,327 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் போக்குவரத்துக்கான செலவு மாத்திரம் 932 ரூபாவினால் அதிகரித்துள்ளமை இலங்கை குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் ஜனாதிபதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் துயர மரணம் தொடர்பில் முன்னாள்...

இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றது. பலஸ்தீன் - "இழப்பு துயரமானது,...

இலங்கையை சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...