follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் எண்ணெய் - டீசல் என்பவற்றை தனியார் நிறுவனங்களின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி

எரிபொருள் எண்ணெய் – டீசல் என்பவற்றை தனியார் நிறுவனங்களின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி

Published on

எரிபொருள் எண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை தனியார் நிறுவனங்களின் ஊடாக இறக்குமதி செய்து பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் தொழிற்சாலைகள் தங்கள் ஜெனரேட்டர்கள் மற்றும் இயந்திரங்களை இயக்க முடியும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் கடற்றொழில் துறையினருக்கு எரிபொருளை வழங்கும் தனியார் நிறுவனங்களின் ஊடாக மின்பிறப்பாக்கிகள் மற்றும் உபகரணங்களுக்கு அவசியமான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் மொத்தமாக எரிபொருளை வழங்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீதான சுமை குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...