ஏப்ரல் 21 தாக்குதல் – மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்

590

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைகளை மேற்கொள்ள, பிரதம நீதியரசரால் விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமொன்று இன்று (01) நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் நீதிபதிகள் அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் இந்த குழாமின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here