இலங்கை – பாரிஸ் நேரடி விமான சேவை மீள ஆரம்பம்

548

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாரிஸின் சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்துக்கு, விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் எயார் பஸ் ஏ 330 – 300 என்ற விமானம் ஈடுபடுத்தவுள்ளதுடன், இந்த விமானங்கள் வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here