கொரோனா தொற்று பரவல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பளார், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6,000 இற்கும் மேற்பட்டோர் இருதய சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ளதுடன், தற்போது அத்தியாவசியமான இருதய சத்திரசிகிச்சை மாத்திரமே இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையில், இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுவதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.