சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலை 2067 ஆண் கைதிகளுக்கும் 396 பெண் கைதிகளுக்கும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு விளக்கமறியில் சிறையில் 964 கைதிகளுக்கும், புதிய மெகசின் சிறைச்சாலையில் 694 கைதிகளுக்கும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இரண்டாவது தடுப்பூசி டோஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.