follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறிய 12 எம்.பிக்கள்

ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறிய 12 எம்.பிக்கள்

Published on

இன்று முதல் ஆளுங்கட்சியின் 12 எம்.பிக்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது கொள்கையின்றி செயற்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை உரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இன்று இந்தக் கட்சியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

  • டளஸ் அலகப்பெரும
  • டிலான் பெரேரா
  • நாலக கொடஹேவா
  • பேராசிரியர் சரித ஹேரத்
  • பேராசிரியர் சன்ன ஜயசுமன
  • கே.பி.எஸ் குமாரசிறி
  • குணபால ரத்னசேகர
  • உதயன கிரிந்திகொட
  • வசந்த யாப்பா பண்டார
  • மருத்துவர் உபுல் கலப்பத்தி
  • மருத்துவர் திலக் ராஜபக்ஷ
  • லலித் எல்லாவல
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...