பச்சைக்குத்துதலை பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்து!

434

பச்சைக்குத்தல் கலையை முறையான பயிற்சியின்றி முன்னெடுப்பது ஆபத்தானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டில் பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடும் பெரும்பாலானோர், முறையான பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பச்சைக்குத்தலுக்காக பயன்படுத்தப்படும் சாயங்கள் தொடர்பில், முறையான ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாமை, மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் ஊசிகளை சகலருக்கும் பயன்படுத்தப்படுகின்றமை, போன்ற செயற்பாடுகளால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.

பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், அவ்வாறு பயிற்சி பெறாத பச்சைக்குத்தல் துறையில் ஈடுபடுபவர்களை கண்டறிய விசேட தேடுதல்களை, மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கதின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here