வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள முடிவு

558

தபால் சேவைகள் இ​டம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்

தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பணி நிமித்தம் அலுவலகங்களை திறக்க கடந்த தினம் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், கடுமையான போக்குவரத்து சிரமங்கள் இருப்பதால், அந்த நிலையை பராமரித்துச் செல்ல கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.

அதன்படி, தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் உடன்பாட்டுடன், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரண்டு நாட்களுக்கு அலுவலகங்களை மூடவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தபால் சேவைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதியோர் கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here