follow the truth

follow the truth

June, 21, 2025
Homeஉள்நாடுடயானாவின் வீட்டிற்கு சென்ற ஜூலி சுங்

டயானாவின் வீட்டிற்கு சென்ற ஜூலி சுங்

Published on

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தலவத்துகொட அக்குரேகொடவில் அமைந்துள்ள சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாவது பிரதிநிதியும் இணைந்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரின் கணவர் கலாநிதி சேனக டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அந்த அறிக்கையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பல யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் தனிப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...