சவூதி அரசு அறிவித்துள்ள புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள்

1686

சவூதி அரேபியாக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் சவூதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக சவூதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது செளதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மேலும் சவூதிக்கு சென்றவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் முடிவில் அவர்களுக்கு கொவிட் தொற்று இல்லை என்று வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here