follow the truth

follow the truth

May, 16, 2024
Homeவிளையாட்டுதொடரை தக்கவைத்தது இந்தியா

தொடரை தக்கவைத்தது இந்தியா

Published on

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.

நாக்பூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டி, ஆரம்பமாவதற்கு முன்னதாக மழைக் குறுக்கிட்டதால், போட்டி 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வேட் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பின்ஞ் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 91 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 7.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 3 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்)...

ஈரானுக்கு எதிராக இலங்கைக்கு அபார வெற்றி

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில்,...

2வது அரையிறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் வழங்கப்படாது

2024 இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள தினத்துக்கு மாற்று தினம் ஒன்று வழங்கப்பட மாட்டாது என...