மீரிகம தங்ஹோவிட பிரதேசத்தில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தின் மதுபான நிலையத்தில் கொள்ளையடிக்க வந்த சந்தேக நபர்கள் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதன்போது பொலிஸாரின் இலக்கு தவறி பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக “அததெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 29 வயதுடைய பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தங்ஹோவிட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.