இறப்பர் பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு இறப்பர் விலை குறைந்துள்ளதன் காரணமாக இறப்பர் சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் இறப்பர் பால் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இறப்பர் கிலோ ஒன்று முன்னர் 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதன் விலை தற்போது 300 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக இறப்பர் சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் இறப்பர் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக தாங்கள் குறித்த தொழிற்துறையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இறப்பர் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.