இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.