அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இருதரப்பு மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகின் மிகப்பெரிய பள்ளிவாசலில் ஒன்றான அபுதாபியின் ஷேக் சயீத் கிராண்ட் பள்ளிவாசலை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டிரம்ப் நாளை மறுநாள் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.