follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP1மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

Published on

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்ததோடு அதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கினார்.

மாகாணங்களில் உள்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்குக் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அந்த நிதிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...