follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபிணைமுறி மோசடி: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோர் விடுதலை

பிணைமுறி மோசடி: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோர் விடுதலை

Published on

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன மகேந்திரன் மற்றும் ஒன்பது பேரை குரற்ச்சாட்டுகளில் இருந்து கொழும்பு நிரந்தர உயர்நீதிமன்றம் விடுதித்துள்ளது.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என கொழும்பு நிரந்தர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த பிணை முறி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளை மூவரடங்கிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதன்படி அர்ஜூன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

இதனால் மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கில் 05 முதல் 14 வரையிலான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...