ஐக்கிய இராஜ்ஜியத்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல், ஐக்கிய இராஜ்ஜியத்தின் கொவிட்-19 ‘சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 08 நாடுகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த அறிவிப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொவிட் -19 பயண விதிமுறைகளுக்கான இணையவாழி வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி துருக்கி, பாகிஸ்தான், மாலத்தீவு, எகிப்து, இலங்கை, ஓமன், பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய எட்டு நாடுகளும் இவ்வாறு சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.