ஜோர்தானில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொன்சியூலர் சேவை முன்னெடுக்கப்பட்டது

305

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நடமாடும் கொன்சியூலர் சேவையானது, தற்போது சுமார் 500 இலங்கையர்கள் பணிபுரியும் அட் துலைலில் உள்ள யுனைடெட் கிரியேஷன்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் நடாத்தப்பட்டது. தொழிற்சாலையில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த இலங்கைத் தொழிலாளர்களை தூதுவர் ஷானிகா திசாநாயக்க சந்தித்தார்.

ஆகஸ்ட் 08 ஆந் திகதி முன்னெடுக்கப்பட்ட நடமாடும் கொன்சியூலர் சேவையானது, இலங்கையர்கள் பலர் தமது விடுமுறை நாட்களில் தூதரகத்தின் கொன்சியூலர் சேவைகளை அணுகிக் கொள்வதற்கு உதவும் வகையில், கொன்சியூலர் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் மீள் பதிவு செய்யும் வகையில் செப்டம்பர் 17ஆந் திகதி (வெள்ளிக்கிழமை) தூதரக வளாகத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. கடவுச்சீட்டுக்களை வழங்குதல் ஃ புதுப்பித்தல் போன்ற பொதுவான கொன்சியூலர் சேவைகளுக்கும் மேலதிகமாக, தொழிலாளர் தொடர்பான உதவிகளும் வழங்கப்பட்டன.

தூதரகத்தின் கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் குழுக்களில், தொழிலாளர் மற்றும் நலன்புரிக்கான மூன்றாம் செயலாளர் ருவன் ரூபசிங்க, இணைப்பாளர் திலானி இட்டகொட, கணக்கியல் உத்தியோகத்தர் ஹர்ஷன லியனகே மற்றும் கொன்சியூலர் அதிகாரி அனுருத்திகா புன்சிஹேவகே ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here