follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉலகம்தற்காலிகமாக மூடப்படும் ட்விட்டர் அலுவலகங்கள்

தற்காலிகமாக மூடப்படும் ட்விட்டர் அலுவலகங்கள்

Published on

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டிடங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இரகசிய தகவல்களை பத்திரிகைகள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ட்விட்டரின் புதிய உரிமையாளரான, எலோன் மஸ்க், அந்நிறுவன ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளார்.

ட்விட்டர் ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் ஒரு நாளைக்கு அதிக மணிநேரம் வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்

நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இது தொடர்பான உறுதிமொழியை வழங்க சம்மதிக்க வேண்டும் என எலோன் மஸ்க், ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உறுதிமொழிக்கு உடன்படாத ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியத்துடன் சேவையிலிருந்து வெளியேறலாம் என்று எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ், உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி – இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம்

விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு...

இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொலை – ட்ரம்ப் கண்டனம்

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றின் அருகே இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கிரீட்...