இலங்கையை சீர்குலைக்கும் Onmaxdt பிரமிட் திட்டம்

2239

அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரமிட் வியாபாரம் ஒன்று தொடர்பில் இந்நாட்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ONMAXDT விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தும் போஸ்டர்
ONMAXDT விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தும் போஸ்டர்

 

கிரிப்டோகரன்சி (cryptocurrency) மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதாகச் சொல்லி, அதற்குப் பணம் தரப்படும் நபர்களுக்கு மென்பொருள் (app) ஒன்றினை அறிமுகப்படுத்தி, கணக்குக் கொடுத்து, பணத்தை முதலீடு செய்து, கணக்கில் உள்ள பணம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக காட்டப்பட்டு, பணம் வழங்குபவர்களிடையே நம்பிக்கையை உருவாக்கி மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு திட்டமாகவே இந்தத் திட்டம் செயல்படுகிறது.

இருப்பினும், இது ஒரு மென்பொருளால் இயக்கப்பட்டாலும், அதற்கான பணத்தை வைப்பு செய்ய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைப்புக்கான கணக்கு இலக்கம் கொடுக்கப்படாது, மேலும் அவர்கள் வைப்பு செய்பவர்களின் கையிலிருந்து மட்டுமே பணத்தைப் பெறுவார்கள். மேலும், கைமுறையாக வழங்கப்படும் பணம் Onmaxdt இன் பிரதிநிதிகள் மூலம் எடுக்கப்படும். பணத்தைக் கொடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பணம் கொடுத்தவருக்கு வழங்கப்பட்ட மென்பொருள், சம்பாதித்த பணம் USDT ஆகப் பெறப்பட்டதாகக் காட்டுகிறது. ஆனால் அவர்களின் கணக்குகள் ரூபாய்களில் செலுத்தப்படுகின்றன.

குறிப்பாக, அவுஸ்திரேலிய நிறுவனம் போன்று பாவனை செய்து, இவ்வாறு வைப்பாளர்களின் கணக்கில் பணத்தை வைப்பிலிடும் இந்த நிறுவனம் நடத்திய விசாரணையில், இலங்கையில் உள்ள பல்வேறு நபர்களின் ஊடாக உள்ளூர் வங்கிகள் மூலம் பணம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

போலியான தகவல்

மேலும் Onmaxdt ஆல் நடத்தப்படும் Facebook சமூக ஊடகப் பக்கத்தில் அவர்களின் முகவரி 42 Logan Rd, Woolloongabba QLD 4102, Australia என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கூகுள் வரைபடம் மூலமாகவும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு பத்திரிகையாளர்கள் மூலமாகவும் ஆய்வு செய்தபோது, ​​அந்த இடத்தில் அப்படி ஒரு நிறுவனம் இல்லை, The Bungalow Brisbane என்ற ஒரே ஒரு உணவகம் மட்டுமே உள்ளது என்பது தெரியவந்தது.

Onmaxdt இனால் வழங்கப்பட்டுள்ள முகவரியானது போலியானது
Onmaxdt இனால் வழங்கப்பட்டுள்ள முகவரியானது போலியானது

குறிப்பாக எந்தவொரு புகழ்பெற்ற நிறுவனமும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு முன்பு அதன் சட்டப்பூர்வத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் விசாரணையில் இலங்கையில் இந்த நிறுவனத்தால் அப்படி ஒரு பதிவு செய்யப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், இவ்வாறானதொரு நிறுவனத்திற்கு இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில், 2022.08.23 ஆம் திகதி தகவல் அறியும் உரிமையின் கீழ் இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் தெரிவிக்கப்பட்ட தகவலும் தெரிய வந்துள்ளது. அத்தகைய நிறுவனத்திற்கு இலங்கையில் பணத்தை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை மேலும், Onmaxdt தொடர்பாக பொதுமக்களின் முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டு முதல் நிதி பரிவர்த்தனைகளை நடத்தி வருகிறது, ஆனால் அவர்களின் இணையதளத்துடன் தொடர்புடைய Onmaxdt.com என்ற பெயர் 2021-07-22 அன்று பெறப்பட்டது, அது 2022-11-22 அன்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. https://who.is/ whois இணையதளத்தை மதிப்பாய்வு செய்யும் இணையதளம் மூலம் தேடும் போது இது வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

Onmaxdt.com எனும் இணையத்தளம்
Onmaxdt.com எனும் இணையத்தளம்

இது தவிர, உலகில் நடக்கும் மோசடிகள் தொடர்பான சில விமர்சனங்களை Scam Detector இணையதளம் வழங்குகிறது, எந்த இணையதளத்திற்கும் Scam Detector அல்காரிதம் மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன, அதன்படி, மோசடி இல்லாத எந்த வலைத்தளமும் 50% க்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் அந்த இணையதளத்தின்படி Onmaxdt.com எனும் இணையத்தளமானது (https://www.scam-detector.com/validator/onmaxdt-com-review/) 0.7% சதவீதத்தைக் கொண்டுள்ளது . அதன்படி, Scam Detector இணையதளத்தின் முடிவு என்னவெனில், இந்த இணையதளம் முதலீட்டுத் துறை தொடர்பான மற்ற காரணிகள் தொடர்பான அதிக அபாயச் செயல்பாடுகளைக் கொண்ட இணையதளமாக கண்டறியப்பட்டுள்ளது.

 

மேலும், ஆஸ்திரேலிய நிறுவனமாகத் தோன்றும் இந்தநிறுவனத்தின் பார்வையாளர்களின் பரவல் குறித்து, நவம்பர் 22, 2022 நிலவரப்படி, அதன் இலங்கை பார்வையாளர்கள் 94.61% ஆகவும், கனடாவில் இருந்து 5.39% ஆகவும் இருந்தனர்.

https://www.similarweb.com/website/onmaxdt.com/#geography. இது ஆஸ்திரேலியாவில் எந்தவிதமான பார்வையாளர்களையும் காட்டவில்லை, மேலும் இந்த அமைப்பு ஒரு ஆஸ்திரேலிய நிறுவனமோ அல்லது அங்கு செயல்படும் நிறுவனமோ அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த Onmaxdt வணிகமானது சட்டப்பூர்வ நிறுவனம் அல்ல, ஆஸ்திரேலிய முன்மொழிவு நிறுவனம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டலாம்.

இருப்பினும், இது தொடர்பான உண்மைகளை அறிய, Onmaxdt இன் விளம்பரத்திற்காக உறுப்பினர்களைச் சேர்க்கும் லுணுகம்வெஹரவைச் சேர்ந்த சுமித் சுதுசிங்கவிடம், ஆகஸ்ட் 25, 2022 அன்று இதற்கான பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்று கேட்கப்பட்டது, அவர் அதற்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், இதுவரை பலர் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு தானே பொறுப்பு என்றும் அவர் கூறினார். ஆனால், 10.10, 2022 அன்று ஊடகங்களுக்கு வெளியிடப்படும் இந்தக் கட்டுரைக்காக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இது தொடர்பாக தன்னால் பொறுப்பேற்க முடியாது என்றும், அதற்காக சம்பத் சந்தருவனிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

“இதன் தலைவராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேன் பஸ்நாயக்க என்பவர் உள்ளார். அவர் கண்டியினை சேர்ந்தவர். உண்மையில், இதில் நானும் ஒரு முதலீடுதான். எனக்கும் அதைப் பற்றி அதிகம் தெரியாது. வேண்டுமானால், இலங்கை குழுவில் உள்ள சம்பத்திடம் இருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றும், இந்த நிறுவனத்தின் பிரதேச செயலாளர்கள் கூட பணத்தை வைப்பு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், சம்பத் சந்தருவனை அவர் வழங்கிய தொலைபேசி இலக்கத்தின்படி நவம்பர் 22, 2022 அன்று தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் அவர் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை.

மக்களை ஈர்க்கும் முறை

குறிப்பாக, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள நகரம், அம்பலாந்தோட்டை, அம்பாந்தோட்டை, ரன்ன, லுனுகம்வெஹர உட்பட இலங்கையின் பல மாவட்டங்களில் இந்த பிரமிட் திட்டத்தில் பலர் ஈடுபட்டுள்ளனர். பணத்தை முதலீடு செய்தவர்களில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர். நிலத்தை அடமானம் வைத்தும் சாமானியர்கள் பலர் இதில் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், அவர்களில் காவல்துறை அதிகாரிகளும் உள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

“சுமார் 1000 USDT (மூன்று இலட்சத்து ஏழாயிரத்து ஐநூறு ரூபா) வைப்பிடும் போது ​​அந்தத் தொகை சுமார் 4 மாதங்களில் நமக்குக் கிடைக்கும். அப்படி 15 மாதங்கள் எங்களுக்கு அவர்கள் வழங்குகிறார்கள். எப்படியிருந்தாலும், அந்த 15 மாதங்களுக்கு, முதலில் வைப்பிட்ட தொகையை விட மூன்று மடங்கு எங்களுக்கு கிடைக்கும். ஆனால் இதற்கு மேலும் ஆட்களை சேர்த்தால் எங்களுக்கு வேறு கமிஷன் கிடைக்கும். அதன் பிறகு வைப்பு செய்யப்பட்ட தொகையை சுமார் இரண்டு மாதங்களில் தேடிக்கொள்ளலாம். அதனால்தான் பணம் வைப்பிலிடுபவர்கள் எப்படியாவது மற்றவர்களை இதில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்..” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பணத்தை முதலீடு செய்த ஒருவர் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக இந்த நோக்கத்திற்காக, பணத்தை முதலீடு செய்ய பணம் பெறும் நபர்கள், இந்த பணத்தை ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்வதாகவும், அதிலிருந்து வரும் இலாபத்தை இவ்வாறு விநியோகிப்பதாகவும் மக்களிடம் கூறியுள்ளனர். ஆனால் இதன் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளாக செயல்படும் நபர்களால், இந்த நிறுவனம் முதலீட்டுச் செயல்முறையை மேற்கொள்வதன் மூலம், ஈவுத்தொகையாக விநியோகிக்கப்பட வேண்டிய முதலீட்டை அல்ல, அதில் ஒரு பகுதியைக் கூட கொடுப்பதாக எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள பலரது முகநூல் சமூக வலைதளப் பக்கங்களை நீண்டகாலமாக ஆய்வு செய்ததில், இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், வேறு நபர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கத்தில், தாங்கள் இங்கு முதலீட்டாளர்கள் என்று சூசகமாகச் சுட்டிக்காட்டி, தாம் இதன் மூலம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக புகைப்படங்கள் மற்றும் அவர்களின் முகநூல் சமூக ஊடகப் பக்கங்களில் கருத்துகளை வெளியிட்டிருப்பதனை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக இதுபோன்ற பதிவுகளினால் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து பெறப்பட்ட வாகனங்கள், அவை பெறப்பட்ட விதம், பல சமயங்களில் அதிக அளவில் பணம் வசூலித்த புகைப்படங்கள் கூட வெளியாகியுள்ளன. இலங்கையில் 2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பணமோசடி தடுப்பு (திருத்தம்) சட்டத்தின் படி, ஒருவர் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார் என்பதை வெளிப்படுத்த முடியுமாக இருக்க வேண்டும்.

அதைச் செயல்படுத்தும் அதிகாரம் பொலிசாருக்கும் உண்டு. ஆனால், வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பை இட்டால் போதும் என சட்டத்தை அமுல்படுத்தும் இலங்கையின் பொலிசார் உட்பட பொறுப்புள்ள அதிகாரிகள், ஆயிரக்கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கும் இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் மேலும் பலர் உயிரையும் உடமைகளையும் இழக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படாமை வருந்தத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பல பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு நாம் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. ஆனால் இது தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி மக்களை இந்த மோசடி கும்பலில் இருந்து காப்பாற்ற வேண்டியது அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

முதல் பதிவு – ‘அத’ செய்தித்தாள் 
தமிழில் மொழியாக்கம் – ஆர்.ரிஷ்மா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here