இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டன.
இந்த மருந்துப் பொருட்களை மருந்துத் தட்டுப்பாடு உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இந்த நிகழ்வில், வியட்நாம் தூதுவர் ஹோதாய் தான் ட்ரக் (Ho thi thanh truc) அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்