follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த AZAMARA QUEST

ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த AZAMARA QUEST

Published on

சுமார் 481 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு AZAMARA QUEST என்ற பயணிகள் கப்பல் இன்று (05) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தது.

உலகளாவிய கொவிட் நிலைமைக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் இரண்டாவது கப்பல் இதுவாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த உல்லாசக் கப்பலில் இருந்து இறங்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால தேசிய பூங்கா, உடவலவ யானைகள் சரணாலயம் மற்றும் சில சுற்றுலா விடுதிகளுக்குச் சென்றனர்.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பலின் கப்டன் ஜோஹன்னஸ் தைஸே கூறுகையில், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் வசதிகள் அடிப்படையில் சிறப்பாக உள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யால, உடவலவ போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சுற்றுலா வழிகாட்டி அதிகாரி ஜயந்த விஜேதுங்க தெரிவித்தார்.

இந்த கப்பல் இன்று இரவு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருந்து இந்தோனேசியாவில் உள்ள சபான் துறைமுகத்திற்கு புறப்பட உள்ளது.

இணைப்புச் செய்தி 
மற்றுமொரு சொகுசுக் கப்பலான Azamara Quest

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...