இங்கிலாந்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களுடனான உறவுகள் குறித்து கலந்துரையாடல்

640

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் விம்பிள்டனின் பிரபு அஹ்மத் ஆகியோர் நியுயோர்க்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அண்மையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

வர்த்தகம், துறைமுக நகரம் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாவை மீண்டும் ஆரம்பித்தல் ஆகியன குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைச்சர்கள், புலம்பெயர் மக்களுடனான உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

கோவிட் தொற்றுநோயால் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு நிறுவனங்களால் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் குறித்து அஹ்மத் பிரபுவுக்கு அமைச்சர் பீரிஸ் விரிவாக விளக்கினார்.

வசதியான காலப்பகுதியில் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பீரிஸ் விடுத்த அழைப்பை அஹ்மத் பிரபு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here