பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோரம் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இதனால் முகமது அலி ஜின்னாவின் சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதற்கு பலூச் விடுதலை முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பலூசிஸ்தானில் பல ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம், பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.