follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்கணினியில் கோளாறு: அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

கணினியில் கோளாறு: அனைத்து விமானங்களும் தரையிறக்கம்

Published on

கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க நேரப்படி காலையில், விமானிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோடம் (NOTAM) என்ற அமைப்பு செயல் இழந்து விட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த அமைப்பு, ஆபத்துகள், விமான சேவையில் உள்ள மாற்றங்கள், அது குறித்த தகவல்களை அளிக்கும். இந்நிலையில், உரிய தகவல்களை அளிக்காத காரணத்தினால், இந்த நேரத்தில் விமானங்களை இயக்க முடியாது எனக்கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அனைத்து விமானங்களும் விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மற்றும் அங்கு செல்லும் என 400 விமானங்கள் தாமதமாகி உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பங்களாதேஷில் அறிமுகம்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பங்களாதேஷ் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள்தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் இடைக்கால...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...