விமான விபத்தையடுத்து நேபாளத்திற்கு இன்று துக்கம் அனுசரிப்பு

461

காத்மாண்டுவில் இருந்து நேபாளத்தின் பொக்காரா நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், நேபாள அரசால் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உட்பட 72 பேருடன் சென்ற விமானம் நேற்று காத்மாண்டு விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் பயணித்த 68 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போன 4 பேரை தேடும் பணியில் நிவாரணப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் சுமார் 300 உதவிப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின் இடிபாடுகளில் எவரும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்று தேடுவதுடன், உடல் உறுப்புகளையும் தேடி வருகின்றனர்.

விமானம் விழுந்து நொறுங்கியபோது வீடுகள் மீது விழுந்து விடாமல் தடுக்க விமானி கடுமையாக முயன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். விமான விபத்தையடுத்து, நேபாளத்தில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here