follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுமுட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் இன்னும் இல்லை

முட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் இன்னும் இல்லை

Published on

முட்டை இறக்குமதி தொடர்பான சுகாதார பரிந்துரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த நிலையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என அதன் தலைவர் திரு.ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரை கிடைக்காமை காரணமாக அந்த நடவடிக்கை தாமதமடைந்துள்ளது.

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது.

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் 40 ரூபா எனும் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

இதன்மூலம் தற்போது சந்தையில் காணப்படும் முட்டைப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஷாரா செவ்வந்தியின் தாயின் இறுதிக் கிரியை இன்று

கணேமுல்ல சஞ்சீவா கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரான கட்டுவெல்லேகம இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று...

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே தாக்குதல் – ஐவர் வைத்தியசாலையில்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில், முதலாமாண்டு மாணவர்கள் மீது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக,...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர்...