follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுமுதலாவது சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

முதலாவது சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Published on

2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று(17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார்.

குத்தகை உடன்படிக்கையொன்றின் கீழ் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் தொடர்பான நடவடிக்கை முறைக்காக ஏற்பாடு செய்வதற்கும், குத்தகை, வாடகைகள், சேவை விதிப்பனவுகள் மற்றும் ஒழித்துக் கட்டப்பட்ட சேதவீடுகளின் நிலுவைகளை அறவிடுவதற்கான ஒழுங்குபடுத்துவதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக இந்தச் சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சட்டமூலம் கடந்த ஜனவரி 05ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் இச்சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தியதைத் தொடர்ந்து இது 2023ஆம் ஆண்டு 01ஆம் இலக்க குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமாக இன்று(17) முதல் நடைமுறைக்கு வருகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஷாரா செவ்வந்தியின் தாயின் இறுதிக் கிரியை இன்று

கணேமுல்ல சஞ்சீவா கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரான கட்டுவெல்லேகம இஷாரா செவ்வந்தியின் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று...

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே தாக்குதல் – ஐவர் வைத்தியசாலையில்

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில், முதலாமாண்டு மாணவர்கள் மீது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக,...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர்...