follow the truth

follow the truth

July, 16, 2025
Homeஉள்நாடுஉறவினர்கள் - நண்பர்களுக்கு பேரூந்துகளை வழங்கவில்லை

உறவினர்கள் – நண்பர்களுக்கு பேரூந்துகளை வழங்கவில்லை

Published on

இந்நாட்டில் இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கே பிரபஞ்சம் திட்டம் மூலம் பேரூந்துகளை வழங்குகிறேனே தவிர யாருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த உன்னத வேலைத்திட்டம் தொடர்பில் தேவைப்பட்டால் ஒருவார கால பாராளுமன்ற விவாதத்திற்கு தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பல பாடசாலைகளில் போக்குவரத்துச் செலவு பாரியளவில் செலவாகுவதாகவும், அது இந்நாட்டில் உள்ள பெற்றோரின் பணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்கு பரிகாரமாகவே பஸ் வசதிகளை ஏற்பாடு செய்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சிலர் தேர்தலின் போது தமது சின்னம் மற்றும் விருப்பிலக்கங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களுக்கு பஸ்களை பயன்படுத்துகிறார்கள் என்றாலும், குழந்தைகளின் நலனுக்காகவே தாம் பஸ்களை நன்கொடையாக வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காட்டு யானைகளை சுடுவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15)...

பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித...

1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய...