இலங்கை இன்று பொருளாதார ரீதியில் பிரச்சினைக்குரிய நிலையில் உள்ள போதிலும் அது தனியாக இல்லை என பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் தெரிவிக்கிறார்.
பொதுநலவாய நாடுகள் எப்போதும் இலங்கையுடன் நிற்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற புவிசார் அரசியல் வரைபடவியல் தொடர்பான ஆரம்ப மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய போதே பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் அடக்குமுறை நிலைமையை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும், அந்த அடக்குமுறை நிலையை இலங்கை தாங்குவது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், பொதுநலவாயத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகொள்வதற்கும், ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் ஒருவரையொருவர் நோக்கிய பொறுப்புக்கூறல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.