தென்னை தோப்புகளை சேதப்படுத்தும் வெள்ளை ஈ பாதிப்பை கட்டுப்படுத்தும் சிறப்பு வாரம் இன்று ஆர்ம்பிக்கப்படுகின்றது.
நிகழ்ச்சித் திட்டம் குறித்து தென்னைச் செய்கை சபையின் தலைவர் மாதவி ஹேரத் தெரிவிக்கையில், வெள்ளை ஈக்கள் தொடர்பில் நாம் ஊடகங்களூடாக பலமுறை ஆலோசனைகளை வழங்கினோம். இந்த வேலைத்திட்டம் 100 நாட்களை கொண்டது. நமது கணிப்பீட்டின் பிரகாரம் இதனை மட்டுப்படுத்தலாம் என நம்புகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.