JAAF இன் தலைவராக ஷரட் அமலியன் மீண்டும் தெரிவு

222

இலங்கையை உலகின் முதலாம் ஆடை உற்பத்தி நாடாக மாற்றும் இறுதி இலக்கை நோக்கி பிரவேசிக்கும் கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் JAAF அதன் 19 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை அண்மையில் நடத்தியது.

இதில் ஷரட் அமலியன் அதன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேவேளை, பிரதித் தலைவர்களாக சைபுதீன் ஜாபர்ஜி மற்றும் பீலிக்ஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் அமலியன்,’2025க்கு அப்பால் ஆடைத் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய தலைமுறை தைரியமான மற்றும் ஆர்வமுள்ள இளம் தலைவர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை துயுயுகு ஏற்றுக்கொள்வதாக வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், பல ஆண்டுகளாக துயுயுகு தக்கவைத்து வரும் நம்பகத்தன்மை, சவாலான மற்றும் முன் எப்போதும் இல்லாத சமூக பொருளாதார நிலைமையில் போட்டியிடுவதற்கு அரசாங்கம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதில் தொழில்துறைக்கு மகத்தான ஆதரவை வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரப் பின்புலம், வியாபாரம் செய்வதற்கு இது ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here