போதிய தீர்வு கிடைக்கவில்லை – நாளையும் பணிப்புறக்கணிப்பு

381

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிசங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபட்டனர்

தொழிற்சங்கத்தினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழில் நடவடிக்கையை நிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கு போதிய தீர்வு கிடைக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்தே தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான ஆய்வு ரீதியான அறிக்கையை நாளை (14) காலை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதாக அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி இது தொடர்பில் அரசியல் தீர்மானங்கள் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். இன்று நாம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை வைத்தியர் ஹரித்த அளுத்தே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளையும் ஐந்து மாவட்டங்களில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்தே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here