இசைக் கச்சேரியுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டம் காலிமுகத்திடலில்

415

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும் வெளிநாட்டவர்ளுக்கான போட்டிகள் அடங்கிய “வசந்த சிரிய 2023” (வசந்தத்தின் வனப்பு 2023) தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 22 ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு காலிமுகத்திடல் மைதானததில் நடைபெறவுள்ளது.

காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதோடு மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பணியாளர் குழாம், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் சிறுவர்களுக்கென ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 18 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதோடு பப்பாசி விதைகளை எண்ணுதல்,மறைந்திருக்கும் விருந்தினரை தேடுதல், யானைக்கு கண் வைத்தல்,கண்கட்டி முட்டி உடைத்தல்,தென்னை ஓலைப் பின்னல்,தேங்காய் துருவல் ,தலையணைச் சண்டை,பணிஸ் உண்ணுதல் ,சூப்பியில் பானம் அருந்தல், ஊசிக்குள் நூல் இடுதல் ,100 மீற்றர் ஓட்டப் போட்டி,கண்கட்டியவருக்கு தயிர் ஊட்டுதல் ,தடைதாண்டி ஓடுதல்,பலூன் உடைத்தல், மெழுகுவர்த்தி ஏற்றல் ,கரண்டியில் தேசிக்காய் எந்தி ஓடுதல், கயிறு இழுத்தல்,சங்கீதக் கதிரைப் போட்டி ,சங்கீத தொப்பி போட்டி ,கிராமியப் பாடல் போட்டி,டொபி வரைதல்,அழகிய சிரிப்பு,பெரிய வயிற்றை தெரிவு செய்தல் உள்ளிட்ட போட்டிகள் அதில் அடங்கும்.

எந்தவொரு இலங்கையரும் பங்கபற்றக் கூடிய 16 திறந்த போட்டிகளும் இதில் அடங்குவதோடு “புர செரிய” ஸ்டேண்டட் சைக்கிள் சைக்கிளோட்டம்,மரதநோட்டம், மெழுகுவர்த்தி ஏற்றல், பலூன் உடைத்தல், யானைக்கு கண் வைத்தல்,டொபி வரைதல்,சிறந்த சிரிப்பு, புத்தாண்டு அழகன் மற்றும அழகி தெரிவு உட்பட சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் பங்குபற்றக் கூடிய போட்டிகளும் இதில் அடங்கும்.

அத்தோடு வெளிநாட்டவர்கள், தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றியுள்ள ஹோட்டல்களில் உள்ள நபர்களுக்கு பங்குபற்றுவதற்கான 10 திறந்த போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here