அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அங்கு 16 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களை அனுமதிக்கப்பட்டதை நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளது.
அவர்கள் சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரை வேலை செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.