தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் இதுவரை வழங்கப்படவில்லை

271

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிட செலவிடப்பட்ட 20 கோடிக்கும் அதிகமான தொகை இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அரசாங்க அச்சகத்தின் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடுவதற்கு பங்களிப்பு செய்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை திறைசேரியால் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here