மாணவர்களை தாக்கிய சம்பவம் – 05 பேருக்கு பிணை

240

பண்டாரவளை பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 5 பாடசாலை மாணவர்களும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மற்றும் 12 க்கு இடையில் பண்டாரவளை பொலிஸில் ஆஜராகுமாறு பண்டாரவளை பதில் நீதவான் கெனத் டி சில்வா உத்தரவிட்டார்.

இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here