பயணப் பொதியிலிருந்து 91 ஸ்மார்ட் தொலைபேசிகள் மற்றும் தங்கம் பறிமுதல்

1026

அலி சப்ரி ரஹீம் பயணப் பொதியிலிருந்து 91 ஸ்மார்ட் தொலைபேசிகள் தங்கம் பறிமுதல்

3.5kg தங்கம்; 91 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி

சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் 3 கிலோ 397 கிராம் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதுடன், இதன் சந்தை பெறுமதி சுமார் 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினரின் பயணப் பொதியில் இருந்து 91 ஸ்மார்ட் கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை சுங்கத்தின் வருமான கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிவில் சுங்க சோதனையும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுங்கத் திணைக்கள பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here