கால்நடைகளுக்கு வைரஸ் நோய் – இறைச்சிக்காக பயன்படுத்த தடை

1364

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், அந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் கால்நடைகள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் ‘லம்பி ஸ்கின்’ எனப்படும் நோய் 2000க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரவியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வடமேற்கு மாகாணத்துக்குள்ளும், மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த மாடுகளின் இறைச்சியை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று திரு.பி.சி.எஸ் பெரேரா தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here